கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். எல்ஐசி முகவராக வேலை பார்த்து வரும் இவர், தனது வீட்டில் சந்தன மரத்தை வளர்த்து வந்தார்.
காவல்துறைக்கு சவால் விடும் சந்தன மரக் கடத்தல் - காவல்துறை
கோவை: பிரேம்குமார் என்பவரது வீட்டில் வளர்ந்து வந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மரத்தை நேற்றிரவு (ஜூலை 30) அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர். வீட்டின் முன்பாக இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பிரேம்குமார் உடனடியாக சாய்பாபா காலனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களகாவே சாய்பாபா காலனி, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகளில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கோவிந்தராஜ், வல்லரசு என்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றும் அதே பகுதியில் சந்தன மரம் வெட்டப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.