கோயம்புத்தூர்: சாராதா மில் சாலையில் பகவதி பாண்டியன் என்பவர் பாண்டியன் ஸ்டோர் என்ற மளிகை கடையை 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் (ஆக.28) வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை (ஆக.29) வந்து பார்க்கையில் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்க்கையில் பீடி, சிகெரெட் பண்டல்கள் மற்றும் பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்க பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. பீடி, சிகரெட் பண்டல்களின் மதிப்பு ரூ.73 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் புகார்