பொள்ளாச்சி அருகே உள்ள பாலக்காடு சாலையில் நல்லூர் சோதனைச்சாவடியில் இன்று தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
உரிய ஆவணம் இல்லாத ரூ. 5 லட்சம் பறிமுதல்! - without proper documents
பொள்ளாச்சி: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 5 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கோழி தீவன வியாபாரி கிருஷ்ணகுமார் என்பவரின் வேனை சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் வந்த ஈச்சர் வேனை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள் வாழைத்தார் வியாபாரி யூசுப் என்பவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் அதனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கரூரைச் சேர்ந்த வாழைத்தார் வியாபாரி ராஜசேகர் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 57 ஆயிரத்து 300 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இன்று மட்டும் பறக்கும் படையினரால் 5 லட்சத்து 63 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரி ரவிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.