கோயம்புத்தூர்: கணபதியை சேர்ந்த மாலதி (52) என்பவர் அன்னூர் பொன்னேன்கவுண்டன் புதூர் ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திக்குமார் என்பவரிடம், தனது மகள் திருமணம், மகனின் உயர்கல்விக்காக 20 லட்சம் ரூபாய் கடனாக அவர் பெற்றுள்ளார்.
மேலும் 5 பேரிடம் மோசடி
பணத்தை திருப்பிக் கேட்டபோது, காசோலையாக கார்த்திக்குமாரிடம் தந்துள்ளார். ஆனால் அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. அதிர்ச்சியடைந்த அவர் மாலதியிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை.
இதேபோல் உறவினர்கள் ஐந்து பேரிடம் ரூபாய் 29 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.