தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் 4 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்!

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Singapore to Coimbatore flight  Coimbatore  Singapore  gold smuggled  smuggling  coimbatore airport  coimbatore news  coimbatore latest news  தங்கம் கடத்தல்  நகை பறிமுதல்  விமானத்தில் நகை கடத்தல்  கோவை விமான நிலையம்  கோயம்புத்தூர் செய்திகள்  Scoot Airlines  ஸ்கூட் ஏர்லைன்ஸ்  தங்கம் பறிமுதல்
தங்கம் கடத்தல்

By

Published : Nov 12, 2022, 9:11 AM IST

கோயம்புத்தூர்: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து வந்தனர்.

அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 20 நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களை சோதனை செய்ததில் சட்டை பேண்ட் பாக்கெட்டுகள், உடைமைகளில் தங்கம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து 7.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு 4.11 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பசை வடிவில் தங்கம்.. விமான நிலைய அதிகாரிகள் ஷாக்!

ABOUT THE AUTHOR

...view details