கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள மணிகாராம்பாளையத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியின்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையைக் காவலர்கள் சோதனை செய்தனர்.
அந்தப் பையில் 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. உடனே அவர்களைக் கைதுசெய்த காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வடவள்ளியைச் சேர்ந்த கிதர் முஹமது (66), கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (39) என்பதும் தடாகம் பகுதி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் இவர்களுக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்து தந்ததுள்ளதும் தெரியவந்தது.