தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! - coimbatore latest news

கோவை: செல்வபுரம் பகுதியில் சுமார் 100 கிலோ எடைக்கொண்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

kovai
kovai

By

Published : Dec 11, 2019, 8:36 AM IST

கோவை செல்வபுரம் பகுதியில் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கபடுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அங்கு காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் 100 கிலோ எடைக்கொண்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதனை வைத்திருந்த தாமஸ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : கஞ்சா விற்பனை: தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details