கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அதனைப் பயன்படுத்திக்கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலையடுத்து பொள்ளாச்சி செமணாம்பதி சோதனைச் சாவடியில் பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழிகளைச் ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 163 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகனத்தில் வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வினை, ஜோன் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தொடர் கள்ளச் சாராய கடத்தல்கள்; 810 லிட்டர் பிடிபட்டது!