தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் கையில் பிளேடுடன் ரவுடி மிரட்டல் - வைரலாகும் வீடியோ - Rowdy threatening

கோவை பேருந்து நிலையத்தில் பிரபல ரவுடி ஒருவர் கையில் பிளேடு வைத்து கொண்டு சக கூட்டாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோ

By

Published : Aug 5, 2021, 6:15 PM IST

Updated : Aug 5, 2021, 6:28 PM IST

கோயம்புத்தூர்: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ரவுடி ஒருவர் அவரது சக கூட்டாளி ஒருவருடன் பிளேடு காட்டி மிரட்டும் வீடியோ வைராலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மதுபோதையில் இருக்கும் ரவுடி மற்றொரு நபரிடம் ஆபாச வார்த்தைகளை பேசி கையில் பிளேடு வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்.

இதனை கண்டு அங்கிருந்தவர்கள் விலகிச் செல்கிறார்கள். இவர்கள் சண்டை போட்டு கொள்வதை அங்கிருந்த நபர் ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கபாலி என்கிற பிளேடு கபாலி என்பதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

இது போன்று பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், அல்லது கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐ.ஏ.எஸ். அலுவலரின் கணவரிடம் கைவசம் காட்டிய கொள்ளையர்கள்

Last Updated : Aug 5, 2021, 6:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details