தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் போக்குவரத்து நிலவரம் குறித்து அறிய உதவும் 'roadEase' செயலி! - போக்குவரத்து காவலர்களுக்கு செயலி

கோவையில் போக்குவரத்து நிலவரம், நெரிசல் மற்றும் மாற்று பாதைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான roadEase என்ற செல்போன் செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவையில் போக்குவரத்து நிலவரம் குறித்து அறிய அறிமுகமாகும் 'roadease' செயலி
கோவையில் போக்குவரத்து நிலவரம் குறித்து அறிய அறிமுகமாகும் 'roadease' செயலி

By

Published : Nov 15, 2022, 8:11 PM IST

கோவை: நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனிடையே நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலப் பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அலுவலக நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் மேப் செயலியில், போக்குவரத்து நிலவரங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தகவல்களை அப்டேட் செய்யும் வகையில் roadEase என்ற செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.

எங்கெங்கு பணிகள் நடைபெறுகிறது, எந்த பகுதியில் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்து இதில் அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்படி காவல் துறையில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்குச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நிலவரம் குறித்து அறிய அறிமுகமாகும் 'roadease' செயலி

சென்னையில் இது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கோவை மாநகர காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், முகப்புப் பக்கம் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்கள் மத்தியில் விவரித்தார். நிகழ்ச்சியின் போது செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் செய்முறை விளக்கம் காட்டப்பட்டது.

இதையும் படிங்க: தேயிலை தோட்ட கழகத்தை மூடுவது ஏற்புடையதல்ல: புதிய தமிழகம் கட்சி தலைவர்

ABOUT THE AUTHOR

...view details