31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மத்திய போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.
சாலை பாதுகாப்பு வாரமானது இன்று முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும். இன்று நடந்த விழிப்புணர்வு பேரணியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சாலை பாதுகாப்பு, போக்குவரத்து பாதுகாப்பு வாசகங்கள் உள்ள பதாகைகளை ஏந்தியும், தலை கவசம் அணிந்தும் இந்தப் பேரணியில் அவர்கள் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ”கோவை மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அபராதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக் கூட்டம் நடைபெறும். விதிமுறைகளை மீறிச் செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தும் அவர்களது ஓட்டுநர் உரிமைத்தை ரத்துசெய்யவும் அந்தந்த சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவான சாலை பாதுகாப்பு வார விழா?