கோயம்புத்தூர்: நவக்கரை பகுதியில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து விசாரிக்க கேரளா சென்ற தமிழ்நாடு வனத்துறையினரை கேரள ரயில்வே காவல்துறையினர் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைக் கண்டித்து கோவையில் கேரள சமாஜ் சாலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டக்காரர்கள் கேரளா ரயில்வே காவல் துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். திடீரென சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பயமா.. எனக்கா.. 100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி