பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஏபிடி வீதி சாலையில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சாலை பயணத்தின்போது புழுதிகள் அதிகம் பறப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
குடிநீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - பொதுமக்கள் சாலை மறியல்
பொள்ளாச்சி: குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டித்து திருவள்ளுவர் திடல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சாலையில் மூடப்படாமல் கிடக்கும் குழிகளை சரிசெய்யவும், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.