கோயம்புத்தூர்:பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற 77 வயதான அரசுப் பள்ளி ஆசிரியர், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடம் சிறுவயது முதல் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 20ஆம் தேதி காலை ஆசிரியரின் நண்பரும், அவரது மனைவியும் பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றனர்.
அவர்களது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்குச் சென்ற ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்தனர்.
அப்போது, ஆசிரியர் சிறுமியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுமியின் பெற்றோர், ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கேட்டபோது முறையாக அவர் பதிலளிக்கவில்லை. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், பின்னர் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!