தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய கலைகளை வளர்க்கத் தயாராகும் பட்டாளங்கள்..! - பாரம்பரிய கலைகளை வளர்க்கத் தயாராகும் பட்டாளங்கள்

கோவை: தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயில்பவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினால் கலைகளை மேலும் வளர்க்க முடியும் என்று கிராமிய கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Reservation of education and employment for those who study traditional arts recommended folk artist

By

Published : Sep 29, 2019, 2:55 PM IST

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமான ஒயிலாட்டத்தையும் கொங்குமண்டல மக்கள் தற்போது ஆர்வத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவின் 22ஆவது ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் மூன்று முதல் 72 வயதுடையோர் அரங்கேற்றம் செய்தனர். மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம் தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் நடைபெற்றது.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான கனகராஜ் கிராமங்கள்தோறும் சென்று ஒயிலாட்டக் கலையை மக்களிடையே பரப்பிவருகிறார். இதுகுறித்து கனகராஜ் கூறுகையில், ஒன்பது ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒயிலாட்டக் கலைஞர்களை உருவாக்கியுள்ளதாகவும், வரும் மாதங்களில் இந்த கலைகளை பல்வேறு நாடுகளில் பரப்பும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாரம்பரிய கலைகளை வளர்க்கத் தயாராகும் பட்டாளங்கள்

மேலும், இந்த கலையை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இலவசமாக கற்றுக் கொடுப்பதாகவும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்தால் பாரம்பரிய கலைகளை மேலும் வளர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளிப்பது போல் தமிழர்களின் கலைகளை பயில்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்து ஊக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியை சின்னியம்பாளையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details