கோயம்புத்தூர்: வால்பறை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அதனை பிடிக்ப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பிரசாத் IFC (INDIAN FOREST SERVICE) நேற்று (ஜூலை 21) ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பொள்ளாச்சி உதவி வன பாதுகாவலர், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, ஆணையாளர் சுரேஷ்குமார், கால்நடை மண்டல மருத்துவ இயக்குனர் மனோகரன், அரசினர் மருத்துவமனை உதவி காவலர் கணேஷ், மேலும் சிலர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மூன்று சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.