கோவை மாவட்டம் ஆலந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட மூங்கில் மடைகுட்டையிலிருந்து மசராயன் கோவில் வரை, சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு, இரண்டு கோடி ரூபாயில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மலை அடிவாரத்தில் அமைக்கப்படும் இந்த தார் சாலை, அனைத்துக் கூறுகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மின் கம்பங்களுக்கு இடையே அமைக்கப்படுவதால், அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் விளைநிலங்களில் இருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இரண்டு கோடி ரூபாயில், இரண்டு கிலோ மீட்டருக்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மூங்கில் மடை குட்டையிலிருந்து அமைக்கப்படும் இந்த சாலையின் நடுவே, சுமார் 10 மின் கம்பங்கள் வருவதால், இந்த சாலையை கனரக வாகனங்கள் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.