பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினரும், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினரும் இணைந்து உலக தென்னை தின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். பி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வேளாண்மை உற்பத்தியாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை வணிகத் துறை ஆணையாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயராமன், பொள்ளாச்சியில் ஒரு கொள்முதல் நிலையம் அமைத்து அதில் நீரா பானத்தை பதப்படுத்தி உலகம் முழுவதும் அதனை ஏற்றுமதி செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என்றும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கேரள முதலமைச்சரை சந்தித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.