தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை கொண்டை ஊசி வளைவு - ஒளித்திரைகளை புதுப்பிக்க கோரிக்கை! - வால்பாறை சுற்றுலா

கோயம்புத்தூர்: வால்பாறைப் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் பழுதான ஒளித்திரைகளை புதுப்பிக்க வேண்டுமென சமூகச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வால்பாறை
வால்பாறை

By

Published : Jun 11, 2020, 5:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைப் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், எதிரே வரும் வாகனங்களை அறிந்துகொள்ள ஒளித்திரை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஒளித்திரைகளை சில சுற்றுலாப் பயணிகள் சேதப்படுத்துகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாமல், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி விபத்துகள் ஏற்படுகின்றன.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக பழுதான ஹார்ன் ஒலி, ஒளித்திரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறைப் பகுதியில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதனால் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக ஒளித் திரைகள் அமைந்துள்ளன.

ஆனால், சுற்றுலா வரும் சமூக விரோதிகள், மதுப்பிரியர்கள் இதனை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் வால்பாறையில் இயற்கை அழகை ரசித்து கண்டுகளித்துச் செல்லவேண்டும். மாறாக, சிலர் சேதப்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகச்செயற்பாட்டாளர்கள் காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details