தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பு - திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - etv bharat

கண்டிவழி மலைவாழ் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்துவரும் திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு

By

Published : Jul 26, 2021, 7:33 PM IST

கோயம்புத்தூர்: வீரபாண்டி பஞ்சாயத்திற்குள்பட்ட கண்டிவழி மலைவாழ் கிராமத்தில் 27 குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்கு காரமடை பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் என்பவருக்கு இடம் உள்ளது.

அவரது இடத்திற்கு செல்ல பாதை இல்லாததால் அங்குள்ள ஓடை ஒன்றை மறித்து சுரேந்திரன் பாதையை அமைத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு

அதேபோல் பஞ்சாயத்தால் கட்டப்பட்ட கிணற்றையும் மூடியுள்ளார். அதுமட்டுமின்றி மலைவாழ் மக்கள் கோயிலுக்கு செல்லும் தடத்தையும் அடைக்க இருப்பதாக தெரிகிறது.

இதனை தட்டி கேட்ட மலைவாழ் மக்களிடம் தான் வனத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:காவலர் லஞ்சம் - துறை ரீதியான நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details