கோயம்புத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் 73ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் நம் மண்ணை வளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்மக்கள் அனைவருக்கும் 73ஆவது குடியரசு தின நல்வாழ்த்துகள்.
நம் பாரத தேசம் நாகரிகத்திலும், கலாசாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது. ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், அந்நாட்டில் உள்ள மண் வளமாக இருக்க வேண்டும்.
மண்ணில் இருக்கும் உயிர்சக்தி போய்விட்டால், ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான் நம் தேசம் சென்று கொண்டு இருக்கிறது.
குடியரசு தினவிழாவில் சத்குரு பேச்சு இந்த குடியரசு தினநாளில் நம் மண்ணை வளமாக வைத்துக் கொள்ளவும், இந்த தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நலமான வாழ்வு வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பதிவு: மகாபாரத கதை சொல்லி வழக்கை ரத்து செய்த நீதிபதி