தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதிக்கிடையே பாதுகாப்பான ஹெலிகாப்டர் பயணம் - கோவையில் அறிமுகம்! - வாடகை ஹெலிகாப்டர் பயணம்

கோவை: கரோனா பீதிகளுக்கிடையே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்விதமாக கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Rental Chopper service introduced in coimbatore
கோவையில் வாடகை ஹெலிகாப்டர் பயணம் அறிமுகம்

By

Published : Sep 8, 2020, 1:10 PM IST

கோவை மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. காலனி கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையம், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ஹாலிடேஸ் பிளானட் எக்ஸ் இணைந்து ஹெலிகாப்டர் வாடகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தச் சேவையின் மூலம் ஒருவரின் சொந்த பயண திட்டத்திற்கு தனியார் ஹெலிகாப்டரை கோவையில் அரைமணி நேரம் முதல் அவர்களின் தேவைக்கேற்ப வாடகைக்கு எடுக்க முடியும்.

திருமண புகைப்படம் எடுப்பது, மலர் பொழிவு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணநாள் கொண்டாட்டங்கள், ஓய்வு பயணங்கள், நகர சுற்றுப்பயணம், மருத்துவ அவசரநிலை போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்த தனியார் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் நிலையாக இந்த வாடகை சேவை மூலம், கோவை மக்களுக்காக நகர சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் என மக்கள் ஹெலிகாப்டரில் நகர சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.

ஹெலிகாப்டரின் இருக்கை திறன் ஐந்து பயணிகள் மற்றும் ஒரு பைலட் கொண்டதாக உள்ளது.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பான பயணத்தை விரும்பும் நிலையில், ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஹெலிகாப்டரில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும், அரசு அனுமதியுடன் இந்தச் சேவை இயங்கப்பட்டுவருகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோவை மாநகராட்சியைக் கண்டித்து பேனர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details