தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு - இந்து சமய அறநிலையத் துறை

கோவையில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு
கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

By

Published : Aug 18, 2021, 1:13 PM IST

கோவை:தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அறநிலையத் துறை அமைச்சரும் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

அதன் தொடர்ச்சியாக கோவை பெரிய கடை வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் வரும் லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்த வணிகக் கட்டடமும், உப்புகண்ணார் வீதியில் அமைந்துள்ள பேட்டை விஸ்வேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்த வணிகக் கட்டடமும் வாடகை செலுத்தாததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.

கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

அதனடிப்படையில் இரண்டு கட்டடங்களை அப்புறப்படுத்த கோவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் உத்தரவிடப்பட்டு நேற்று (ஆகஸ்ட் 17) இடிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் பெரியக்கடை வீதியில் இடிக்கப்பட்ட பாரம் தூக்கும் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் மூன்று பழக்கடைகள் அதிமுகவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

இதையும் படிங்க: 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டேன் - நித்தியானந்தா அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details