கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்துவந்த நிலையில், கடந்த சில நாள்களாக சில இடங்களில் தொற்றின் பாதிப்பு அதிகரித்துவந்தது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக கோயம்புத்தூர் ஆட்சியர் இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார்.
மாநகராட்சிப் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர நகைக்கடைகள், துணிக்கடைகள் போன்ற மற்ற அனைத்துக் கடைகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
தளர்வில்லா ஊரடங்கு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள் அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி உள்பட 44 பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து துணிக்கடைகள், நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்ட நெரிசலுடன் காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன.
அதேசமயம், இந்நாள்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க:ஈரோட்டில் 2 மாதங்களில் 25 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம் - எஸ்பி தகவல்