கோயம்புத்தூர்: அன்னூர் அடுத்த காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்னக்கரசம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ரங்கம்மாள். 102 வயதான இவர் சனிக்கிழமை (டிச.3) காலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உறவினர்கள் ரங்கம்மாள் உடலை காரேகவுண்டம்பாளையம் சாலையில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரங்கம்மாள் உடலை சாலையின் நடுவில் வைத்துவிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா, அன்னூர் தாசில்தார் தங்கராஜ், மற்றும் ஊராட்சி தலைவர் தங்கராஜ் ஆகியோர் மூதாட்டியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.