கோவை:கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மணல்மேட்டில் இன்று (டிச.20) ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் அடையாளங்களில் ஒன்றாக ரேக்ளா பந்தயம் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி இன்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
பெள்ளாச்சியில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள் - சீறிப் பாய்ந்த காளைகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

பெள்ளாச்சியில் கலை கட்டிய ரேக்ளா பந்தயம்
200 மீட்டர், 300 மீட்டர் கொண்ட இந்த போட்டிகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பெள்ளாச்சியில் கலை கட்டிய ரேக்ளா பந்தயம்
இதையும் படிங்க:பாய்ந்தோடிய காளைகள்: களைகட்டிய அன்னூர் ரேக்ளா பந்தயம்