தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2019, 4:28 AM IST

ETV Bharat / state

’மது விற்பனை நேரத்தை 8 மணியாக குறைக்க வேண்டும்’

கோவை: மது விற்பனை நேரத்தை எட்டு மணியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

TASMAC

பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து டாஸ்மாக் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலுச்சாமி, "தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை தொடங்கிய நாளிலிருந்து 16 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் குறைகளைக் கேட்க டாஸ்மாக் நிர்வாகம் குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும். மேலும் டாஸ்மாக் விற்பனை நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இருப்பதால், பத்து மணிக்கு மேல் விற்பனையாளர்கள் செல்லும்போது மர்ம நபர்களால் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற செயல்கள் அரங்கேறி வருவதால் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி டாஸ்மாக் விற்பனை நேரம் இரவு பத்து மணி என்பதை இரவு எட்டு மணியாக குறைக்க வேண்டும். கடுமையான பணி சூழலில் பணியாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் தொகையை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலுச்சாமி செய்தியாளர் சந்திப்பு

இது டாஸ்மாக் பணியாளர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியிருப்பதால் 40 விழுக்காடு போனஸாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் நீண்ட நாட்களாக நிறைவேற்றபடாத கோரிக்கைகளை வென்றெடுக்க டாஸ்மாக் பணியாளர்களை இணைத்து கூட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" என்றார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ்!

ABOUT THE AUTHOR

...view details