கோயம்புத்தூர்:கோவையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாட் ஜேம்ஸ் இன்று (டிச.5) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதில், கடந்த 90 நாட்களாக கிட்டதட்ட எட்டு கட்டப் போராட்டம் நடத்தினோம். இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அமைப்புகளுடன் சேர்ந்து, நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகிறோம். அதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை 50% சதவீதத்தை நிறைவேற்றி தந்தனர்.
12-ல் மனித சங்கிலி போராட்டம்:இதில், பீக்கவர் மின் கட்டணமாக (peak hour electricity price), ரூ.3,500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்பட்ட வருகின்றனர். இந்த தொகையை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்கவும், 3.ஏ.ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என வலிறுத்தினோம்.
மேலும், கிரில் ரோக் வெல்டிங் தொழிலில் 12 கிலோ வாட் மின் கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனைத் தவிர்க்கவும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை மாவட்ட தலைநகரில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.