பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை புங்கன் ஓடை பாலம் பகுதியில், ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், அவர் வந்த வாகனத்தை சோதனையிட்டனர்.
பொள்ளாச்சியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது - பொள்ளாச்சி செய்திகள்
பொள்ளாச்சி: சேத்துமடை பகுதியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ஆனைமலை காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.
அதில் பொது மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள், அவற்றை கடத்தப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட தாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெகநாதன் (34) என்பவரையும் கைது செய்தனர்.
துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் உத்தரவின்படி, ஆய்வாளர் ரமேஷ் கண்ணா உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களிடம் ஓட்டுநர் ஜெகநாதன், கடத்தல் அரிசி, வாகனத்தை ஒப்படைத்தனர்.