தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Rashtra Sevika Samiti: ராஷ்டிரிய சேவிகா சமிதி பயிற்சி முகாமிற்கு தடை விதிக்கக் கோரி மனு

Rashtra Sevika Samiti: கோவையில் ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு நடத்தும் பயிற்சி முகாமிற்குத் தடை விதிக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

By

Published : Dec 24, 2021, 5:11 PM IST

பயிற்சி முகாமிற்கு தடை விதிக்க கோரி மனு
பயிற்சி முகாமிற்கு தடை விதிக்க கோரி மனு

கோவை: Rashtra Sevika Samiti:ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான ராஷ்டிரிய சேவிகா சமிதி சார்பில் பயிற்சி முகாம், கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ராஷ்டிரிய சேவிகா சமிதி(ஆர்எஸ்எஸ்) அமைப்பு நடத்தும் பயிற்சி முகாமிற்கு தடை விதிக்கக்கோரி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

'மத அமைப்பைத்தூண்டி வரும் ஆர்எஸ்எஸ்'

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.ராமகிருட்டிணன், "ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான ராஷ்டிரிய சேவிகா சமிதி என்கிற இந்துத்துவ அமைப்பின் பயிற்சி முகாம் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே தொடர்ந்து மத உணர்வுகளையும் வெறுப்பு அரசியலையும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அமைப்புத் தூண்டி வருகிறது.

13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி வழங்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பயிற்சி முகாமிற்கு தடை விதிக்க கோரி மனு

மேலும் அங்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவுவதால், தனியார் கல்லூரியில் நடைபெறும், இந்தப் பயிற்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் பயிற்சி நடைபெறும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details