தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை

கோவை: சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின்பேரில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை இன்று நடைபெற்றுது.

பத்திரிக்கையாளர்களுக்கு ரேபிட் சோதனை
பத்திரிக்கையாளர்களுக்கு ரேபிட் சோதனை

By

Published : Apr 21, 2020, 3:00 PM IST

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத் துறையினர் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்களுக்கு ரேபிட் சோதனை

இந்நிலையில் சென்னையில் சில பத்திரிகையாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் இன்று பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அனைத்துப் பத்திரிகையாளர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.

இந்த ரேபிட் சோதனை முடிவுகள் பரிசோதனை செய்துகொண்டவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும். ரேபிட் சோதனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானால் அடுத்தக்கட்டமாக அவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details