ஆண்டுதோறும் கோவை மாவட்டம் எட்டிமடைப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இம்முறையும் ரேக்ளா பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.
இந்தாண்டு நடைபெற்ற போட்டியினை கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம் இந்தப் போட்டியானது 300 மீட்டர், 200 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற காளைகள், சிறந்த காளைகள் என தேர்வுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்துவருவதால், பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: குமரியை குதூகலப்படுத்திய மாட்டுவண்டி பந்தயம்!