தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினியின் ஆன்மீக அரசியல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்'- அர்ஜூன் சம்பத் - aanimika arasiyal rajini

கோவை:ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்

rajini's politics make changed a lot in tamil nadu arjun sambath said

By

Published : Oct 3, 2019, 1:48 AM IST

Updated : Oct 3, 2019, 8:02 AM IST

பொள்ளாச்சியில் அனுமன் சேனா, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அவ்வமைப்புகளில் இருந்து வெளியேறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முன்னிலையில் இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்," வருகிற 9ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களையும் சொத்துக்களையும் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் பேட்டி

இந்த ஆணையை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் சொத்துக்களை அபகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு அந்த ஆணையை திரும்பப் பெறவேண்டும்.

ரஜினிகாந்த் தனது அரசியலை ஆன்மீக அரசியலாக அறிவித்திருக்கிறார். தற்போது அவர் விவேகானந்தர் மடத்திற்குச் சென்று தான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக அரசியல்வாதி என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த நிலை தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க:இந்தி படித்தால் தான் அரசு வேலையா? - கனிமொழி பாய்ச்சல்

Last Updated : Oct 3, 2019, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details