நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியினை பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி தொடங்குவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழ்நாடு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என அவரைச் சார்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.
'இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை' - ரஜினி ரசிகரின் திருமண அழைப்பிதழ் - ஆன்மீக அரசியலின் புரட்சி
திருமண அழைப்பிதழில் ரஜினியின் அரசியல் வசனங்கள் கோவை: ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் ரஜினி புகைப்படத்துடன் "இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை" உள்ளிட்ட அரசியல் வசனங்களுடன் அச்சடித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வசனங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ்
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர், ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் கூடிய தனது திருமண அழைப்பிதழில், அன்பு கொண்டு அரவணைக்கும் ஆன்மீக அரசியலின் புரட்சி "இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை", "நாமின்றி வேறுயாருமில்ல" என்ற அரசியல் வாசகங்களுடன் அச்சடித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறவினர்களிடம் கொடுத்துள்ளார்.
அரசியல் வசனங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.