கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் "பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவர் 'மன்னிப்பு கேட்க முடியாது' என பேட்டியளித்துள்ளார் அந்தப்பேச்சு திமிரானது.
ரஜினியின் பேச்சு திமிர் தனமானது - தமிழ் புலிகள் கட்சி... - தமிழ் புலிகள் கட்சி
கோவை: பெரியாரைப் பற்றி அவதூராக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினிகாந்தின் பேச்சு திமிரானது என தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் பேட்டியளித்துள்ளார்.
tamil puligal party
அப்படிபட்ட அவதூறுப் பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வலுவான போராட்டம் நடத்தப்படும். இந்துத்துவா சக்திகளின் பேச்சை கேட்டு அவர்களுக்கு கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுகிறார். திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்றே சொல்லப்பட்ட பாசிச கருத்துதான் அவர் பேசியது" என்றார்.
இதையும் படிங்க:‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்...