தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினி அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
ரஜினியின் வருகைக்கு எதிர்பார்ப்பு
இதுகுறித்து கோவை தெற்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், "பல வருடங்களாக ரஜினியின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தோம். இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏமாற்ற மடைந்த ரஜினி ரசிகர் பேட்டி வேறு கொடியை பிடிக்க மாட்டோம்
இறுதிவரை அவரது ரசிகர்களாக இருப்போம். ரஜினி கொடியை ஏந்திய கைகளால் வேறு எந்தக் கொடியையும் பிடிக்கப் போவதில்லை. ரஜினி பூரண உடல் நலத்துடன் நீண்ட வருடங்கள் வாழ வேண்டும். இறுதிவரை அவருக்கு ரசிகர்களாக நாங்கள் இருப்போம். ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பி பூத் கமிட்டிவரை அமைத்து, தற்போது களப்பணியில் ஈடுபட்டுவந்த கோவை மாவட்ட ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பேட்டி