கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், உள்ளாட்சித் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். தேர்தலின்போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தன்னிடம் தெரிவித்தால் நிறைவேற்றிவிடலாம் என உறுதியளித்தார்.
மேலும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு உண்டு எனச் சொன்ன அவர், தான் பேரூராட்சித் தலைவராக இருந்தபோது மக்களை நேரடியாகச் சென்று பார்த்ததை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட வேலுமணி, நீங்களும் அதுபோல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.