கோவை மாவட்டம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதேபோல் நேற்றும் கோவையில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து வடிந்த மழை நீரானது தரையில் தேங்கி நின்றது.
அரசு மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்த மழைநீர்: உள்நோயாளிகள் அவதி
கோவை: அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் மழை நீர் தேங்கி நிற்பதால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
gh
இதனால் படுக்கைகள் ஈரமானதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் மன்ற பகுதியில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில்மரத்துக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம், கார் ஆகியவை சேதமடைந்தன.