வடகிழக்கு பருவ மழை: கோவையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
கோவையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை கோவையில் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
By
Published : Nov 4, 2022, 1:12 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைப்பேசி எண்கள் வழங்கப்படுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் செய்திக்குறிப்பில், ”வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள்,
அலுவலகத்தின் பெயர்
கட்டுப்பாட்டு அறையின்
தொலைபேசி எண்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
0422-1077, 0422-2301114
மாநகராட்சி பிரதான அலுவலகம்
0422-2302323, 8190000200(whatsapp)
மாநகராட்சி வடக்கு
0422-2243133
மாநகராட்சி தெற்கு
0422-2252482
மாநகராட்சி கிழக்கு
0422-2577056, 2572696
மாநகராட்சி மேற்கு
0422-2551700
மாநகராட்சி மையம்
0422-2215618
வால்பாறை நகராட்சி
04253-222394
பொள்ளாச்சி நகராட்சி
04259-220999
மேட்டுப்பாளையம் நகராட்சி
04254-222151
கூடலூர் நகராட்சி
0422-2692402
கருமத்தம்ப்பட்டி நகராட்சி
0421-2333070
காரமடை நகராட்சி
04254-272315
மதுக்கரை நகராட்சி
0422-2511815
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர்
04254- 222153
அன்னூர் வட்டாட்சியர்
04254- 299908
கோவை வடக்கு வட்டாட்சியர்
0422-2247831
கோவை தெற்கு வட்டாட்சியர்
0422-2214225
சூலூர் வட்டாட்சியர்
0422-2681000
பேரூர் வட்டாட்சியர்
0422- 2606030
மதுக்கரை வட்டாட்சியர்
0422-2622338
கிணத்துக்கடவு வட்டாட்சியர்
04259-241000
பொள்ளாச்சி வட்டாட்சியர்
04259-226625
ஆனைமலை வட்டாட்சியர்
04253- 296100
வால்பாறை வட்டாட்சியர்
04253- 222305
பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.