தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தேர்தல் பரப்புரை - coimbatore district news

கோயம்புத்தூர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.

ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி பரப்புரை
ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி பரப்புரை

By

Published : Jan 16, 2021, 3:37 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக, மநீம உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் பரப்புரை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தேர்தல் பரப்புரையை அவர் தொடங்க இருப்பதாக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறுகையில், "திமுக கூட்டணியை பலப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளார். பயணத் திட்டங்களை விரைவில் தலைமை அறிவிக்கும்" என்றார்.

இதையும் படிங்க: வேல் யாத்திரை - பொங்கல் விழா: ராகுல், நட்டா, பகவத் வருகையும் அரசியலும்!

ABOUT THE AUTHOR

...view details