கோயம்புத்தூர்: மாவட்டத்தில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். நியாயவிலை கடையில் உள்ள பொருள்களின் தரத்தை ஆய்வு செய்து அங்குள்ள பயோமெட்ரிக் கருவியை பரிசோதனை செய்தார்.
மேலும், பொதுமக்களிடம் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் சில குறைகளை தெரிவித்தனர். முக்கியமாக பயோமெட்ரிக் கருவி அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் இதனால் வயதானவர்கள் உள்பட பலருக்கும் பொருள்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். அவர்களிடம் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதியளித்தார்.
மேலும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் கருவி சில நேரங்களில் வேலை செய்யவில்லையென்றால் குறிபேடு எதிலாவது கையெழுத்து வாங்கிவிட்டு பொருள்களை தருமாறு ஊழியர்களிடம் கூறினார். பின்னர் பொதுமக்கள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தபோது பொன்னாடையை வாங்கி முதியவருக்கு அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2.21 ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இரவு நேரத்தில் கேரள எல்லை சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டில் 34ஆயிரத்து 777 நியாயவிலைக் கடைகள் உள்ளன. கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.