கோவை:கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், "கடந்த மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் குறித்த தகவல்களை ஒரு கும்பல் திரட்டியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆசை வார்த்தை கூறி சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு இந்த கல்வி உதவித் தொகையை பெற 2000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
அதற்கான க்யூ ஆர் ஸ்கேன் கோடு தங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர். இதை நம்பிய பெற்றோர் அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு 2000 ரூபாய் செலுத்தி உள்ளனர்.என்பது விசாரனையில் தெரியவந்தது.பின் பணம் செலுத்திய ஓரிரு நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்பட்டிருந்த மொத்த தொகையும் மர்ம நபர்களால் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் தொடர்பாக ஒரே மாதிரியான புகார் வந்ததையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பின் விசாரணையில அரசு கல்வி உதவித் தொகை தருவதாக கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வங்கி கணக்கில் இருந்த தொகையை முழுவதுமாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்த நபர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது.