கோவை :தமிழ்நாட்டில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில்,கோவையில் நடைபெறவுள்ள மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” 2018ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பட்டியலில் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.