தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்னும் ஒரு சில நாளில் புதிய டாஸ்மாக் கடை திறக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் முற்றுகை! - Coimbatore karumathampatty

இன்னும் ஒரு சில நாட்களில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்த நிலையில், அனைத்துக் கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் கருமத்தம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்னும் ஒரு சில நாளில் புதிய டாஸ்மாக் திறக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் முற்றுகை!
இன்னும் ஒரு சில நாளில் புதிய டாஸ்மாக் திறக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் முற்றுகை!

By

Published : Jun 24, 2022, 5:07 PM IST

கோயம்புத்தூர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு அப்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து பல்வேறு கட்டப்போராட்டங்கள் மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவமனை, பள்ளிகள், தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அலுவலர்களிடம் மனு அளித்தனர்.

அதேநேரம் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து ஒரு சில நாளில் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சோமனூர் சாலையில் மதுக்கடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுக்கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “தேவாலயம், குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிறைந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஏற்கெனவே பல கட்டப்போராட்டம் நடத்தி மதுக்கடை அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் மதுக்கடை கொண்டுவந்தால் சட்டவிரோதச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறும்.

இன்னும் ஒரு சில நாளில் புதிய டாஸ்மாக் திறக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் முற்றுகை!

மேலும் இப்பகுதியில் மதுக்கடை அமைவதைத் தடுத்த நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அடுத்த கட்டமாக மதுக்கடை முற்றுகை உள்ளிட்டப் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்து - மாற்றுத்திறனாளி சகோதரிகள் பலி

ABOUT THE AUTHOR

...view details