கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் குடியிருந்த மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக இடமாற்றம் செய்யப்பட்டு, மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகருக்கு இடம் மாற்றப்பட்டனர். அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்து சட்டமன்ற உறுப்பினர் - சட்ட மன்ற உறுப்பினர்
கோவை: வாக்குப்பதிவிற்கு வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்க சென்ற சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் சுற்றி நின்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜீனன் வாக்குபதிவிற்கு வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு இவ்வளவு நாள் எங்கே போனீர்கள் , அடிப்படை வசதிகள் இல்லாமல் தாங்கள் சிரமப்படுவதாகவும், ஒட்டுப்போட மட்டும் நாங்கள் வேண்டுமா என கேள்வி எழுப்பினர்.
ஆனால் மக்களின் கேள்விக்கு செவி கொடுக்கமால் அனைவரும் தவறாமல் தாமரைக்கு ஒட்டுபோடுங்கள் என வாக்கு சேகரித்து சென்றுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரித்ததிற்கு தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.