கடந்த சில தினங்களாகவே, கரோனா தொற்று பரவலில் கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்: கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோயம்புத்தூர்: கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்
இரண்டாவது தவணை தடுப்பூசி
இந்த மாவட்டத்தில் 84 மையங்களில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், சுங்கம் பகுதியில் உள்ள நகர் நல ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகளவில் மக்கள் திரடண்டர். இதனால் மக்கள் வெகுநேரம் அங்கேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பேசிய பொதுமக்களில் சிலர், தடுப்பூசி மையங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர்.