கோவை:கோவை மாவட்டம், வால்பாறையில் 54 அரசு மற்றும் தனியார் எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்டேட்டில் உள்ள மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இங்கு வரும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக அங்கிருக்கும் தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சையளிக்காமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி: முன்னதாக, இந்த மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாததால் அவசர காலத்தில் ரத்தம் செலுத்த முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் இருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ நேரங்களில் பலனில்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வால்பாறையில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள பிரவீன் என்பவர், கர்ப்பிணியான தனது மனைவி ஸ்ரீஜியை வால்பாறை மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டு மீண்டும் வால்பாறை மருத்துவமனைக்குச் சென்ற பொழுது தலைமை மருத்துவர் ஸ்ரீஜி வயிற்றில் வளரும் குழந்தை தொப்புள் கொடி வளர்ச்சி இல்லாததால் ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக பொள்ளாச்சி செல்ல வேண்டும் எனத் தெரிவித்ததின் பேரில் பொள்ளாச்சி வந்து தனது மனைவிக்கு முழு உடல் பரிசோதனை செய்த பிறகு எவ்விதப் பிரச்னையும் தற்போது இல்லை. ஆனால், வால்பாறைக்கு கர்ப்பிணி பெண்கள் சென்றால் சுகப்பிரசவம் நடக்க இருக்கும் நிலைமையில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறி கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டாயமாக ஆப்ரேஷன் செய்து பிரசவமா?:பின்னர் மீண்டும் வால்பாறை மருத்துவமனைக்குச் சென்றபோது அந்த ஸ்கேனின் முடிவில், ஸ்ரீஜி வயிற்றில் வளரும் குழந்தை தொப்புள் கொடி வளர்ச்சி இல்லாததால் ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கட்டாயமாக ஆப்ரேஷன் செய்து பிரசவம் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.