ஊராட்சி குறித்து போலியான செய்தி - தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க மக்கள் புகார் பொள்ளாச்சி:அம்பராம்பாளையம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதி, கெட்டிமெல்லான் புதூர். இப்பகுதி போயர் தெரு அருகில் இருக்கும் நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் படிக்க வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் நூலகத்தின் முன் அமர்ந்து இருப்பார்கள்.
ரகுநாத் என்பவர் கடந்த சில தினங்கள் முன்பு, நூலகம் முன்பு இருந்த கேட்டை மூடி உள்ளார். பின் ரகுநாத் நூலகத்தின் கேட்டை உடைத்து பொதுமக்கள் பயன்படாத வகையில் செய்துள்ளார். இப்பிரச்னை குறித்து ஊராட்சிமன்றத் தலைவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவத்தை குறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சி, தவறாக செய்தி பதிவு செய்து உள்ளனர் என்றும்; பொய்யான செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி மீதும், ரகுநாத் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் ஆனைமலை காவல் நிலைய உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் மனு அளித்தனர். மேலும் ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்' - குழந்தைகள் உரிமை ஆர்வலர்