தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலட்சியமாக பதில் சொன்ன வனத்துறை: பதிலடி கொடுத்த மக்கள் - ஆழியாறு குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

கோவை: பொள்ளாச்சி அருகே மலைப்பாம்பை பிடிக்க வரமுடியாது என வனத்துறையினர் அலட்சியமாக பதிலளித்ததால், பொதுமக்களே பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

public caught the snake and handed it over to the forest department
public caught the snake and handed it over to the forest department

By

Published : Aug 3, 2020, 10:39 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆழியாறு குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க தங்களால் வர இயலாது. நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

பாம்பினை பிடிக்கும் போது மக்களுக்கோ, அல்லது பாம்பின் உயிருக்கோ ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் அலட்சிய போக்கில் செயல்பட்ட வனத்துறையினருக்கு தக்க பதிலளிக்க அங்குள்ள சிறுவர்கள் பாம்பை பிடித்து ஆழியார் வனத்துறையினருக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

அரசுப் பணியில் உள்ள வனத்துறையினர் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிந்தும் அலட்சியமாக பதிலளித்ததால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், வனத்துறையினர் இனியாவது பொதுமக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details