தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பொதுமக்கள் தர்ம அடி! - கடத்தல் காரர் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தர்ம அடி

கோயம்புத்தூர்: சுந்திராபுரம் காந்திநகர் பகுதியில் குழந்தை கடத்தவந்தவர் என நினைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து உதைத்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
மனநலம் பாதிக்கப்பட்டவர்

By

Published : Dec 1, 2019, 1:38 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்திராபுரம் காந்திநகர் பகுதியில் கட்டிட வேலை, தோட்ட வேலைகளுக்குச் செல்லும் சிலர் குடும்பமாக சாலைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு வயது குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவரைப் பிடித்து அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கையைச் சேர்ந்த கார்த்தி என்றும் இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிச்சி, சுந்திராபுரம் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழாமல் இருக்க, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்து சாலைகளில் திரியும் வட மாநிலத்தவரை குடும்பத்தினருடன் சேர்க்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details